Monday, January 14, 2013

காஷ்மீர் கண்ணீர் பூக்கள்...!!!

காஷ்மீர் கண்ணீர் பூக்கள்

இந்திய இராணுவத்தின் அடக்கு முறைக்கு எதிராக காஷ்மீரில் தினம் தினம் மக்கள் போராட்டம் நடந்து கொண்டே வருகிறது. துப்பாக்கி தோட்டாக்களுக்கு எதிராக மக்கள் தங்களின் உயிரையும் துட்சமென கருதி போராடுகின்றனர். குழந்தைகள், பெண்கள், என மக்கள் தங்களின் உறவுகளையும், உறக்கங்களையும் தொலைத்துவிட்டு தெருக்களில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்திய அரசு அவர்களின் மீது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இராணுவத்தின் தோட்டாக்களுக்கு மத்தியில் வெறும் கற்களை கொண்டு சிறுவர்களும், பெண்களும் கூட தெருக்களில் இறங்கி போராடுகிறார்கள்.


இந்த அநீதியை எதிர்த்து அருந்த்திராய் குரல் கொடுத்தால் அவரை கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு, “காஷ்மீர் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டும்மென்றால் இந்த குற்றத்தை இலட்சகணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள் முடிந்தால் அவர்களை கைது செய்துபாருங்கள்.” என அவர் பதிலடி கொடுத்தார்.

இன்றைய ஊடகமோ உயிருக்காகவும், தங்களின் வாழ்வுக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களை பார்த்து தேச துரோகிகல் போல ஒரு தொற்றத்தை உருவாக்குகின்றன. இந்த ஊடகங்கள் கள்ள காதல்களையும், கள்ள தொடர்புகளையும் பற்றி சுவார்ஷ்யமாக எழுதி பழக்கப்பட்டவர்கள். இவர்களிடம் எப்படி உண்மையினையும் நேர்மையினையும் எதிர்பார்க்க முடியும். எத்தனை ஊடகங்கள் காஷ்மீர் மக்களின் கண்ணீர்களை படமெடுத்து காட்டியுள்ளன(?). அவர்களை பார்க்கும் கேமராக்களும், எழுதக்கூடிய பேனாக்களும் அம்மக்களை தீவிரவாதிகள் என்றே சாட்சி கூறுகின்றன. இவற்றில் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே விதிவிளக்கு பெறுகின்றன. காஷ்மீர் மக்கள் பற்றி தவறாக இங்கு இருந்து கொண்டு வியாக்கியானம் பேசிக்கொண்டிருப்பவர்களை காஷ்மீருக்கு நாடுகடத்த வேண்டும். அப்பொழுதுதான் அங்கு தூக்கத்தை துளைத்து தம்பிள்ளைகளை கண்ணீறோடு தேடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள்.


நாம் நமது ஊர்களில் எந்த தொந்தரவும் இல்லாமல் சுதந்திரமா எந்த நேரத்திலும் சுற்றித்திறிகிறோம். ஆனால் அந்த மக்களின் நிலை பற்றி எத்தனை பேருக்கு தெரியும். அங்கு அறிவிக்கப்படாத பல தடைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. வீட்டை விட்டு வெளியேறினால் அடுக்கடுக்கான சோதனைச்சாவடிகள், விசாரனைகள், கொடுமைகள், இதனை அந்த மக்கள் நாளுக்குநாள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.


காஷ்மீரில் காணாமல் போகக்கூடிய இளைஞர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவர்களில் பலர் இன்றுவரை கிடைப்பதே கிடையாது. எழுத்தாளர் அ.மார்க்ஸ் அவர்கள் தனது காஷ்மீர் பயணத்தின் போது உள்ள நிகழ்வுகளை ஆனித்தரமாக எடுத்துவைத்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் படி 2000 – 2002 ஆம் ஆண்டுகளில் மட்டும் 3784 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணக்கீட்டில் இது இன்னும் அதிகமாக உள்ளதாக கூறுகிறார். பிரிவினை கலாசாரத்தின் போது மட்டும் ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம் ஆகும். உலக அளவில் பலமனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவளின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் 1 லட்சம் காஷ்மீர் முஸ்லீம்கள் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைவிட அதிகம். சுமார் 80000 குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 8 லட்சம் இராணுவத்தினர் யாரைவேண்டுமானாலும் கைது செய்யலாம், சுட்டு கொல்லலாம் முழு அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழக்கூடிய மக்கள் தொகைக்கு ஈடு செய்யும் அலவிற்கு அங்கு இராணுவம் குவிக்க என்ன காரணம். இராணுவம் மக்களை காப்பதற்கா? அல்லது மக்களை அடைக்கி ஆழ்வதற்கா ? காஷ்மீர் இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்க காரணம் என்ன ? அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது இவை எத்தனை இளைஞர்கள் ஆராய்ந்து அறிந்துள்ளோம் அல்லது அறிந்து கொள்ள முயற்ச்சி செய்துள்ளோம். நாம் தியேட்டர்களிலும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் தேடி நேரத்தை செலவிடுவதிலும், தேவையற்ற பேச்சிக்களை பேசி அழிந்து போவதிலுமே பழக்கப்பட்டர்கள்.

சில வருடங்களுக்கு முன் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி எல்லைக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள மச்சீல் செக்டர் என்னும் இடத்தில் ஒரு வீட்டைச் சுற்றி வளைத்த இந்திய இராணுவம் அங்கிருந்த மூவரை சுட்டு கொன்றது. பல ஊடகங்கள் இந்திய இராணுவம் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து சுட்டு கொன்றது என பெறுமைப்பட பேசின. இவர்கள் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் என்றுகூட கூறினார்கள். பின்னர்தான் உண்மை வெளிவந்தது சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ரபியாபாத் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட அப்பாவி மக்கள் என தெரியவந்தது. பதவி உயர்விற்காக ராஜ்புத் ரைபிள்ஸ் 4 படையின் இராணுவ மேஜர் உத்தரவின் பேரில் அவர்கள் போலி எண்கவுண்டரில் கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இந்த உண்மை வெளிவந்த பின் எத்தனை ஊடகங்கள் இந்த உண்மையினை வெளியிட்டன என தெரியவில்லை.

மக்களின் இந்த போராட்டங்களால் பொறுக்க முடியாத இந்திய அரசு இராணுவங்களை அந்த மக்கள் மீது ஏவி விடுகிறது. பல நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்படுகின்றன. இருந்தும் தங்கள் உயிர்களை மக்கள் பொருட்படுத்தாமல் போராட்டதில் இறங்குகின்றனர். காஷ்மீர் மக்கள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியே போராட்டம் நடத்துகின்றனர். காஷ்மீர் மக்களின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்ற வாக்குறுதியினை இந்திய அரசு ஐ.நா அவை முன் அளித்தது. ஆனால் அதனை இந்திய அரசு பல ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. இதில் பெறுமையுடன் சொல்லிக்கொள்கிறோம் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று.(?) மக்களை இராணுவத்தினரால் அடக்கி ஆளும் இவர்களை எந்த நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது.

வெளிப்படையாக சொல்லப்போனால் இந்திய அரசு அம்மக்களிடம் வெருப்பினை சம்பாரித்துக் கொண்டிருக்கிறது. அதனலேயே அவர்கள் இந்தியாவிற்கு எதிராக தங்களின் கண்டன குரல்களை எப்பொழுதும் பதியவைத்தவாறு இருக்கிறார்கள்.

தொடரும்.......